சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி - ஆயர்மங்கையர் முறையீடு  

Songs from 213.0 to 222.0   ( திருவில்லிபுத்தூர் )
கண்ணன்திருவவதாரம் (13.0)     கண்ணனது திருமேனியழகு (23.0)     தாலப் பருவம் (44.0)     அம்புலிப் பருவம் (54.0)     செங்கீரைப் பருவம் (64.0)     சப்பாணிப் பருவம் (75.0)     தளர்நடைப் பருவம் (86.0)     அச்சோப் பருவம் (97.0)     புறம் புல்கல் (108.0)     கண்ணன் அப்பூச்சி காட்டுதல் (118.0)     தாய்ப்பால் உண்ண அழைத்தல் (128.0)     காது குத்தல் (139.0)     நீராட்டம் (152.0)     குழல்வாரக் காக்கையை வா எனல் (162.0)     கோல் கொண்டுவா எனல் (172.0)     பூச் சூட்டல் (182.0)     காப்பிடல் (192.0)     பாலக் கிரீடை (202.0)     ஆயர்மங்கையர் முறையீடு (213.0)     அம்மம் தர மறுத்தல் (223.0)     கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல் (234.0)     கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல் (244.0)     கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல் (254.0)     கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை (264.0)     கண்ணன் குழல் ஊதல் (275.0)     நற்றாய் இரங்கல் (286.0)     தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி (297.0)     உந்தி பறத்தல் (307.0)     அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம் (318.0)     திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல் (328.0)     திருமாலிருஞ்சோலை-1 (338.0)     திருமாலிருஞ்சோலை-2 (349.0)     திருக்கோட்டியூர் (360.0)     பத்தராய் இறப்பார் பெறும் பேறு (371.0)     திருமாலின் நாமம் இடுதல் (381.0)     கண்டம் என்னும் திருப்பதி (391.0)     திருவரங்கம் (1) (402.0)     திருவரங்கம் (2) (412.0)     எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல் (423.0)     தன் தகவின்மையை அறிவித்தல் (433.0)     பண்டன்று பட்டினம் காப்பே (443.0)     திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல் (453.0)     அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித (463.0)    
சென்னி ஓங்கு தண் திருவேங்
      கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ
      தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன்
      சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
      இனி என் திருக்குறிப்பே?   



[463.0]
பறவை ஏறு பரமபுருடா
      நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்
      பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக் காடு
      தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுத-ஆறு
      தலைப்பற்றி வாய்க்கொண்டதே



[464.0]
Go to Top
எம்மனா என் குலதெய்வமே
      என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்
      உலகினில் ஆர் பெறுவார்?
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
      நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடித்
      தூறுகள் பாய்ந்தனவே



[465.0]
கடல் கடைந்து அமுதம் கொண்டு
      கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து
      மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என்
      கோல்-ஆடி குறுகப் பெறா
தட வரைத் தோள் சக்கரபாணீ
      சார்ங்க விற் சேவகனே



[466.0]
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
      நிறம் எழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
      மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
      என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா
      என் உயிர்க் காவலனே



[467.0]
உன்னுடைய விக்கிரமம்
      ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால்
      சுவர்வழி எழுதிக்கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கைக்
      கொண்ட இராம நம்பீ
என்னிடை வந்து எம்பெருமான்
      இனி எங்குப் போகின்றதே?            



[468.0]
Go to Top
பருப்பதத்துக் கயல் பொறித்த
      பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
      சென்னியின் மேல் பொறித்தாய்
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய்
      என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை
      உனக்கு உரித்து ஆக்கினையே



[469.0]
அனந்தன்பாலும் கருடன்பாலும்
      ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி
      வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
      கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
      நேமி நெடியவனே



[470.0]
பனிக் கடலில் பள்ளி- கோளைப்
      பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல
      மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே
      தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
      உனக்கு உரித்து ஆக்கினையே



[471.0]
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
      தவள நெடுங்கொடி போல்
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
      தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும்
      மதிற் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
      இடவகை கொண்டனையே



[472.0]
Go to Top
வேயர் தங்கள் குலத்து உதித்த
      விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக்
      கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயர்-ஏற்றை அமரர் கோவை
      அந்தணர்தம் அமுதத்தினைச்
சாயை போலப் பாட வல்லார்
      தாமும் அணுக்கர்களே



[473.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

divya prabandham chapter